#Breaking: அமமுக பிரமுகரின் சகோதரர் வீடு, தியேட்டர் உட்பட 10 இடங்களில் சோதனை..! - Seithipunal
Seithipunal


தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், அமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரையில் உள்ள வெள்ளாகுளம் பகுதியில் வெற்றி திரையரங்கம் உள்ளது. இந்த வெற்றி திரையரங்கத்தின் உரிமையாளராக வெற்றி என்பவர் இருந்து வரும் நிலையில், இவர் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

இவரது சகோதரர் மதுரை அமமுக பிரமுகர் மகேந்திரன் ஆவார். தற்போது தேர்தல் காலம் என்பதால், அக்கட்சியின் சார்பாக பணப்பட்டுவாடா செய்ய, பெரிய அளவிலான தொகை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

கோப்புப்படம்: வெற்றி திரையரங்கம், மதுரை.

இந்த தகவலின் பேரில், மதுரை வெற்றி திரையரங்கம், ஐ.வி.எல்.ஆர். கட்டுமான நிறுவனம், தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள அவர்களுக்கு சொந்தமான பிற நிறுவனங்கள் என 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சோதனையின் முடிவில் பணம் ஏதும் பிடிபட்டுள்ளதா? என்பது தொடர்பான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai AMMK Supporter Vetri Theater Owner Property IT Raid Going On


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->