மொக்க படம்., பீஸ்ட் திரையரங்கு ஸ்கீரின் கொளுத்தபட்டதா?! வைரல் காணொளி.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பெரும்பாலான ரசிகர்கள், இந்த திரைப்படம் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். 

மேலும் இந்த திரைப்படத்தில் கதை ஒன்றும் இல்லை என்றும், யோகி பாபு நடிப்பில் வெளியாகிய கூர்க்கா படத்தின் ஜெராக்ஸ் போன்று உள்ளதாகவும், நம்பும்படியான லாஜிக் இல்லாத காட்சிகள் நிறைய உள்ளது என்றும் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதே சமயத்தில் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் நல்ல ஒரு பொழுதுபோக்கான திரைப்படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மாவட்ட திரையரங்கு ஒன்றில் பீஸ்ட் திரைப்படம் மொக்கையாக இருந்ததாக ஸ்கிரீனை சிலர் கொளுத்தியதாக காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்த காணொளி குறித்து உண்மைத்தன்மை இதுவரை உறுதியாகாத நிலையில், இந்தத் திரைப்படம் சரியாக இல்லை என்பதனாலேயே இந்தத் திரையரங்கின் ஸ்கீரின் கொளுத்தப்பட்டதாக பெரும்பான்மையாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், இந்த காணொளியை பகிரும் ரசிகர்கள் பீஸ்ட் படம் படு மொக்கையாக இருப்பதால் திரையை கொளுத்தப்பட்டுள்ளதாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai beast there some incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->