மதுரை சித்திரை திருவிழா..இந்த ஆண்டு 496 மண்டபங்களில் அழகர் எழுந்தருளி காட்சியளிகிறார்!
Madurai Chithirai Festival This year,Azhagar appears in 496 mandapams
மதுரை சித்திரை பெருந்திருவிழா அடுத்த மாதம் 8-ந் தேதி தொடங்குகிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 12-ந்தேதி அதிகாலை கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
தமிழகத்தில் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாக மதுரை சித்திரை பெருந்திருவிழா உள்ளது .இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி சப்பர முகூர்த்த விழா நடைபெற்றதை தொடர்ந்து வருகிற 27-ந் தேதி மங்கள இசையுடன் முகூர்த்தக்கால் பூஜை நடக்க உள்ளது.
இதை அடுத்த 8-ந் தேதி அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி ,10-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். அதனை தொடர்ந்து 11-ந் தேதி மதுரை மூன்று மாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து வணங்கி அழகரை வரவேற்கிறார்கள்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 12-ந்தேதி அதிகாலை கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். முன்னதாக 496 மண்டபங்களில் அழகர் எழுந்தருளி அப்போது அங்கு திரண்டு இருக்கும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
அதனை தொடர்ந்து 13-ந்தேதி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா. 15-ந்தேதி காலையில் அழகர்மலைக்கு பிரியா விடை பெற்று கள்ளழகர் திரும்புகிறார்.17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
English Summary
Madurai Chithirai Festival This year,Azhagar appears in 496 mandapams