16 லட்ச செலவில் மதுரை மருத்துவக் கல்லூரியில் பெரும் மோசடி.! - Seithipunal
Seithipunal


மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் போலியான ஆவணம் மூலம் கல்லூரியில் சேர்வதற்கு முயற்சித்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில், மதுரை மருத்துவக் கல்லூரி இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு நிலையில் உள்ளது தற்போது கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் ஆந்திராவை சேர்ந்த பன்னுவா ரியாஸ் மற்றும் பீகாரை சேர்ந்த நிதிவரதன் ஆகிய இருவரும் இந்த கல்லூரியில் சேருவதற்கான உத்தரவை எடுத்து வந்திருந்தனர்.

இதை ஆய்வு செய்த கல்லூரி நிர்வாகத்தினர் இந்த உத்தரவு போலியாக கொடுக்கப்பட்டு இருப்பதை அறிந்து உடனடியாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் ஆவணங்களை கொண்டு வந்த இருவரிடம் தீவிர விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் டெல்லியை சேர்த்தவர் 16 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு போலியான உத்தரவை தங்களுக்கு அளித்து ஏமாற்றி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த மோசடி குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai medical college fake document for admission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->