தொப்புள் கொடி அறுபடாத நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


பிறந்த குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அங்குள்ள அரசல் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்பொழுது ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக குழந்தையை மீட்டனர். அப்பொழுது தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் குழந்தை ஆற்றல் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது உடனடியாக அவர்கள் காவல்துறை தகவல் அளித்தனர்.விரைந்து வந்த காவல்துறையினர் அந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காஅக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிறந்த ஆண் குழந்தையை ஆற்றில் வீசி சென்ற பெற்றோர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Male infant found In River


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->