செந்தில் பாலாஜிக்கு குவியும் தேசிய கட்சி தலைவர்களின் ஆதரவு! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு, தேசிய கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள கண்டன செய்தியில், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு பாஜக கேடு விளைவிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் மோடி அரசின் யுத்தி வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில், "திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 

விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவது நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் விடுத்துள்ள கண்டன செய்திகுறிப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை மூலம், தென்மாநிலங்களை அமலாக்கத்துறை பழிவாங்க தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjun Kharge Congress condemn to ED Raid in DMK Minister senthil balaji home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->