தொகுதி பங்கீடு இழுப்பறி..? மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ள கார்கே! - Seithipunal
Seithipunal


அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடுத்த வாரம் சென்னை வந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது. 

காங்கிரஸ்-தி.மு.க தொகுதி பங்கீடு உடன்பாடு காண்பதில் இழுப்பறி நிலவுகிறது. தி.மு.க கடந்த தேர்தலை விட குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்திருப்பதால் உடன்பாடு ஏற்படவில்லை. 

மேலும் இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைவர்களும் தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர். பாலு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே தொகுதி பிரச்சனையால் இந்தியா கூட்டணிக்கு சிக்கல் வரக்கூடாது எனவும் தொகுதி எண்ணிக்கையில் காங்கிரஸ் பிடிவாதமாகவும் உள்ள நிலையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் வருகின்ற 10 ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதிக்குள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjun Kharge meet CM Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->