அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். இவர் மனைவி ஆதிலட்சுமி மற்றும் உதவியாளர் சண்முகம் உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் முகமது ஜின்னா மற்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் ஆஜராகினர். 

இந்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர், வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையின் போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister kkssr ramachanthiran property case postponed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->