பொதுமக்கள் தேவையில்லாமல் 11 மணி முதல் 3 மணிவரை வெளியே வரவேண்டாம் - அமைச்சர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் முற்பகல் 11 மணி முதல், பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை : அபிராமபுரம் பகுதியில் கோடைகால வெப்பம்,அனல் காற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

"தமிழகத்தில் கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் பகல் நேரங்களில் 11 மணி முதல் மாலை 3 மணி வரை, இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே இருப்பதென்பது நல்லது. 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் வருவதை நிச்சயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister say about tn summer 2022


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->