பணியின் உருவகம் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து..!  - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கா என்ற கிராமத்தில் கடந்த 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ல் பிறந்த இவர், பஞ்சாப் பல்கலை கழகம், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகங்களிலும் படித்து பட்டம் பெற்றுள்ளார். 

இந்தியாவில் 2004 ம் ஆண்டு முதல் 2014 வரை இரண்டு முறை தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தவரும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கிற்கு  இன்று 90 வயது பூர்த்தியாகிறது. 

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "முன்னாள் பிரதமர், கல்வி அறிவு மிக்க அறிஞர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் ஆட்சியில் அமைதித் தன்மையை வழங்கினார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் போக்கினார், பணிவின் உருவகமாக இருந்து இதையெல்லாம் செய்தார். அவர் நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin wishes to ex prime minister manmohan singh birthday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->