15 வயது சிறுமியுடன் காதல்.. 17 வயது சிறுவனுக்கு நடந்த அவலம்..!
Murder of a 17-year-old boy Near Vellore
காதலின் தந்தையால் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், சாய்நாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோகுல் (17). இவர் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த இரு குடும்பத்தாரும் காவல்துறையினடம் புகார் அளித்தனர். இதற்கிடையில் சிறுமியின் உறவினர்கள் இருவரையும் கடந்த 24ம் தேதி கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது, அந்த சிறுமியின் வீட்டின் பின் சிறுவனை கட்டி வைத்து அடித்துள்ளனர். இதனால், படுகாயமைடந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தவந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சிறுமியின் தந்தை ராஜகுரு மற்றும் உறவினர்கள் ஆகியோரை கைது செய்தனர்.
English Summary
Murder of a 17-year-old boy Near Vellore