நாமக்கல்லில் கிருஸ்துவ பாதிரியாரின் மகன், கொலை வழக்கில் கைது!
Namakkal murugesan murder case
நாமக்கல் அருகே நிலத் தகராறில் சொந்த தம்பியையே அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!
நாமகிரிப்பேட்டை கிராமத்தில் உள்ள நாரைகிணறு பகுதியில் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
முருகேசன் என்பவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். முருகேசனின் தம்பி ஒரு சர்ச்சில் ஃபாதராக இருக்கிறார். இவருக்கு தினேஷ் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் இரண்டு குடும்பத்திற்கும் இடையே பல வருடங்களாக சொத்து பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஃபாதரும் அவரது மகன் தினேஷ்-ம் முருகேசன் வீட்டுக்கு சென்று சொத்தை பிரிப்பதை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். திடிரென தம்பி மகன் தினேஷ் பலமாக முருகேசனை தாக்கியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் நலமாக வீடு திரும்பினார். இந்நிலையில் அவரை தொடர்பு கொண்டு பேசிய அவரது தம்பி, பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்.
இதை நம்பிய முருகேசனும் தம்பியை நம்பி பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளார். அப்போதும் அவரது தம்பி மகன் அவரை கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். சுற்றி இருந்த ஊர் மக்கள் முருகேசனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்திருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலிசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறந்த முருகேசன் உடல் முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கொலையாளி தினேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
அவரை ராசிபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சிறையில் அடைத்தனர். நிலப் பிரச்சனையில் தம்பி மகனே, பெரியப்பாவை அடித்துக் கொலை செய்த சம்பவம், நாமகிரிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Namakkal murugesan murder case