கோவையில் வடமாநில இளைஞர் உடல் மீட்பு.! கொலையா? தற்கொலையா? - தீவிர விசாரணையில் போலீசார்.!
near covai north state youth body rescue on under
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பாரதிநகர் பகுதியில் குடியிருப்புக்கு அருகே 7 அடி பள்ளம் ஒன்று உள்ளது. இதில் வாலிபர் ஒருவர் அடிபட்டு பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் உயிரிழந்த்ய நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தொடர்பாக விசாரணை செய்தனர்.
அதில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பதும், இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் போலீசார் அந்த நபர் அவர் சாலையில் நடந்து சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாராவது கொன்று உடலை இங்கு வீசி சென்றார்களா? என்று விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோவை சிலர் பரப்பிவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வதந்தி பரப்பியவர்களை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் வடமாநில வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near covai north state youth body rescue on under