பல் பிடுங்கி ஏ‌எஸ்பி‌ பல்வீர் சிங் விவகாரம்! இரு போலீசார் பணியிடை மாற்றம்! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ‌.எஸ்.பி‌ யாக பணியாற்றி வந்த பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்த புகாரின் பேரில் அவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், நெல்லை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி, சேரன்மகாதேவி  சப் கலெக்டர் சலீம் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. 

மேலும், மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை மேலும் மும்முறமாக விசாரித்து வருகிறது. 

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், மேலும் இரண்டு காவலர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் எழுந்துள்ளது. 

இந்நிலையில், விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைக்குறிச்சி காவலர் ராஜ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்ய காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai ASP Case 2 police transfer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->