நெல்லை: சுவர் இடிந்து இரு மாணவர்கள் பலி., பள்ளியை அடித்து நொறுக்கும் மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை, பொருட்காட்சி திடல் அருகே உள்ள டவுன் சாஃப்ட்டர் பள்ளியில் நிகழ்ந்த இந்த விபத்தில், 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 5 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 2 மாணவர்கள் கழிவறையின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர், படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் போலீசார் தெரிவிக்கையில், பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 2 மாணவர்கள் அவசர சிகிச்சைகள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. உறுதியான தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து பேச உள்ளோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பள்ளியில் படிக்க கூடிய மாணவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பள்ளி வளாகத்தை சுற்றிலும் பரபரப்பான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NELLAI SCHOOL ACCIDENT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->