இந்த மாதம் இறுதியில் தமிழக சட்டசபை கூடுமா?- வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.!!
november end tn assembly meeting
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நான்கு நாள் நடைபெற்றது. ஆனால், மானியக் கோரிக்கை மீதான விவாதம் உடனே நடைபெறாமல் பாராளுமன்ற தேர்தலுக்காக தள்ளி வைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்ததும் 2024-25-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தை நடத்தும் வகையில் கடந்த ஜூன் 20-ந்தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் அடங்கிய கூட்டம் ஜூலை 29-ந்தேதி வரை நடைபெற்றது.
இதையடுத்து அடுத்த சட்டசபை கூட்டம் டிசம்பர் மாதத்திற்குள் கூட்டப்பட வேண்டும். ஆனால், சபாநாயகர் அப்பாவு தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற இருக்கும் 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார். அவருடன் சட்டசபை செயலாளர் சீனிவாசனும் சென்றுள்ளார். வருகிற 17-ந்தேதி தான் சென்னை திரும்புகின்றனர்.
அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி சட்டசபை கூடும் தேதியை அறிவிப்பார். அதனால், இந்த மாதம் கடைசி வாரம் சட்டசபை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
november end tn assembly meeting