மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.. டாஸ்மாக் பாரில் மது குடித்தவர் உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி அதே பகுதியில் வசிப்பவர் ஹரிஹரனும். இவர்கள் இருவரும் தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலை செய்து வருகின்றனர். அந்த மீன் மார்க்கெட்டுக்கு எதிராக 8123 எண் கொண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடை வழக்கமாக 12 மணிக்கு தான் திறக்கப்படும் நிலையில் இந்த கடைக்கு அனுமதி வாங்கப்பட்ட பாரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே இவர்கள் இருவரும் கள்ளச் சந்தையில் மது வாங்கி அருந்தியுள்ளனர். 

இவர்கள் மது அருந்திய சில வினாடிகளில் வாயில் இருந்து நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதில் குப்புசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஹரிஹரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனால் அந்த பார் உரிமையாளர் உடனடியாக அந்த மதுபான பெட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் குடித்த மதுவை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இவர்கள் குடித்த மதுபானம் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கீழவாசல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயத்தால் தமிழகம் முழுவதும் 23 பேர் தற்போது வரை உயிரிழந்த நிலையில் டாஸ்மாக் பாரில் விற்கப்பட்ட மதுபானத்தை குறித்து ஒருவர் விழுந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One dead one hospitalized after drinking in Tasmac bar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->