திருப்பூர்.! சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து தொழிலாளி காயம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று மாலை திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் காற்றினால் கூரைகள் பிரிந்தும், மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் சுண்டமெடு அம்பேத்கர் நகர் பகுதியில் பலத்த காற்றினால் சாலையோரம் இருந்த பனைமரம் பனியன் தொழிலாளியான ரங்கன் என்பவரின் வீட்டின் மீது விழுந்துள்ளது.

இதனால் வீட்டில் இருந்த ரங்கன் பலத்த காயமடைந்து உள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ரங்கனை மீட்டு உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person was injured when a tree fell on them


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->