கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தாகத்திற்கும் தயாராகும்! அதிமுகவை ஒன்றிணைக்க ஓ.பி.எஸ் அழைப்பு!! - Seithipunal
Seithipunal


அதிமுகவினருக்கு நேற்று சசிகலா அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராகுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இறந்ததற்கு பின்பு டிடிவி தினகரன் கட்சியில் ஒதுக்கப்பட்டதால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார் டிடிவி தினகரன். உயர் வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கிவிட்டு சென்றார்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகவும் முன்னாள்  ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில்  இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16ம் தேதி அறிவித்தது. அதிமுகவில் இருந்து பிரித்து சென்ற டிடிவி தினகரன் பாஜக உடன் கூட்டணி அமைத்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயச்சை சின்னத்தில் போட்டியிட்டார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் படுதோல்வி சந்தித்தாலும் வாக்கு வங்கியை அதிகரித்து உள்ளது என பாஜகவின் சந்தோஷம் அடைந்துள்ளனர். அதிமுக ஒரு நாடாளுமன்ற தொகுதிகளை கூட கைப்பற்றவில்லை. வாக்கு சதவீதமும் கணிசமாக குறைந்துள்ளது. திமுக கூட்டணி தமிழ்நாடு மட்டும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதியிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்க நேற்று சசிகலா அறிக்கை வெளியிட்டார். இன்று ஓ. பன்னீர் செல்வமும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்ததுள்ளார். ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம் கத்தை குச்சியை உரிப்பது கடினம் இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம். நமது வெற்றியை நாளை சரித்திரம் ஆகிட மனசாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும். கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தாகத்திற்கும் தயாராகும் என ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS calls to unite AIADMK


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->