அடுத்து என்ன? சென்னையில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதன் விவரம் பின்வருமாறு :

செய்தியாளர் :  நீங்கள் எப்போது சசிகலாவை சந்திப்பீர்கள்? சசிகலாவை சந்திக்க நீங்கள் சந்திக்க அவர் நேரம் ஒதுக்கி உள்ளாரா?

ஓபிஎஸ் : சின்னம்மா அவர்களை கூடிய விரைவில் சந்திப்பேன்.

செய்தியாளர் :  ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய குடும்ப நலனுக்காக யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார். இது பற்றி உங்களுடைய கருத்து? 

ஓபிஎஸ் : உதயகுமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

செய்தியாளர் : ஓ பன்னீர்செல்வம் ஒரு காலாவதியான மருந்து என்று உங்களை கடுமையாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துகிறாரே?

ஓபிஎஸ் : அது அவருடைய குண நலனை பிரதிபலிக்கிறது.

செய்தியாளர்களின் மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓ பன்னீர்செல்வம் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார்.
 

ஆர்பி உதயகுமார் எம்எல்ஏ பேட்டியின் விவரம் : தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக யாரை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினாரோ, தற்போது அவர்களுடனே இணைந்துள்ளார்.

மக்கள், தொண்டனிடம் ஓபிஎஸ்-தினகரன் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தனக்குப் பதவி இல்லை என்று கூறினால் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றக்கூடியவர் ஓ பன்னீர்செல்வம். தன்னுடைய குடும்ப நலனுக்காக மட்டுமே ஓ பன்னீர்செல்வம் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சந்திப்பார். 

ஓ பன்னீர்செல்வம் ஒரு காலாவதியான மருந்து, அவரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை" என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Next move may 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->