கோடைகாலங்களில், கோவில்களுக்கு பறந்த உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


தற்போது, கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோயில்களில் வெயில்காலம் முடியும் வரை தற்காலிக நிழற்பந்தல்கள் மற்றும் மின்விசிறிகள் ஆகியவை பொருத்தவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து, ஆணையர் முரளிதரன் வெளியிட்டுள்ள உத்தரவில், லெமன் ஜூஸ், குடிநீர் மற்றும் மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்கச் சொல்லியுள்ளார்.

மேலும், வெயிலை சமாளிக்கும் அளவிற்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கவும், நடைபாதைகளில் தேங்காய் நார் பாய்களை விரித்து அவ்வப்போது இந்த பாய்களில் தண்ணீர் தெளித்து குளிர்விக்க வேண்டும். இதில், பழைய தரைப்பாய்களை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் மற்றும் உணவுகளை வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும், சரியாக நடக்கிறதா என்பதை நிர்வாகிகள் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதில், ஏதாவது தொய்வு ஏற்பட்டால் புகார் அளிக்கலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Order For Temples In summer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->