சென்னையில் தலை தூக்கிய மின்வெட்டு.. நள்ளிரவில் பொதுமக்கள் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மின்தடை இல்லை எனவும், நாள்தோறும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதாகவும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக கடந்த ஒரு வார காலமாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு சென்னையில் மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக திருவல்லிக்கேணி, பெரம்பூர், ஈக்காட்டுத்தாங்கல், திருவொற்றியூர், கொளத்தூர், போரூர் உட்பட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இது குறித்து புகார் அளிக்க போன் செய்தால் அதிகாரிகள் எடுப்பதில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சென்னையில் சில பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறை அதிகாரிகள் மட்டுமே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையினர் வந்தால் யாருக்கு என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மின்வெட்டு ஏற்படாத வண்ணம் மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People protest for power cut in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->