நெல்லை: பூட்டிய கதவை திறக்க கூறிய மத போதகரை வெளுத்து வாங்கிய மக்கள் - வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


நெல்லை: பூட்டிய கதவை திறக்க கூறிய மத போதகரை வெளுத்து வாங்கிய மக்கள் - வைரலாகும் வீடியோ!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் திருமண்டல கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக, பேராயர் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய தாளாளர் நியமனம் செய்யப்பட்டு, அதன் படி அவர் பதவியேற்க சென்ற போது, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால், பேராயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பினர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் சில அறைகளை பூட்டு போட்டு பூட்டி சென்றனர். அதனால், அந்த அறைகளை திறக்க வேண்டும் என்றும், அலுவலக பணிகளை முடக்க கூடாது என்றும் பேராயர் தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இதனால், இட்டேரி பகுதியை சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபில் என்பவர் நேற்று காலை பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்திற்கு சென்று, அலுவலகம் பூட்டி வைப்பதால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக திருமண்டல அலுவலகத்தை திறக்க வேண்டும் என்றும் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது அங்கு திடீரென ஏராளமானோர் திரண்டு வந்து காட்பிரே நோபிளை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தது தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை விடாமல் துரத்தி சென்று ஆபாச வார்த்தையால் திட்டிக்கொண்டே தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.

அவர்களிடம் இருந்து தப்பித்துச் சென்ற காட்பிரே நோபில் தனது ஆதரவாளர்களுடன் நெல்லை மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். மதபோதகர் ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples attack religious preacher in tirunelveli vedio viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->