வெள்ள பாதிப்பை பார்த்து உதவ யாரும் வரவில்லை - பொதுமக்கள் சாலை மறியல்..!  - Seithipunal
Seithipunal


விக்கிரவண்டியில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்தது. அதிலும், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விக்கிரவாண்டியில் உள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமத்தை பார்வையிட்டு உதவ யாரும் வரவில்லை என்று குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples strike for no visit and help flood affect in vilupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->