கணவன் சாவில் சந்தேகம்.. மீண்டும் பிரேதபரிசோதனை செய்ய மனைவி மனு..!
Petition to the Juvenile District Collector
கணவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசுந்தரம் இவருக்கு ஷோபனா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். அவர் கேட்டரிங் சர்வீஸ் பணியாற்றி வருகிறார். ஜனவரி 11ஆம் தேதி உங்க வீட்டுக்கு வருவதாக ஞானசுந்தரம் கூறியுள்ளார். இதனையடுத்து கேட்டரிங் சர்வீஸினர் மறுநாள் சுந்தரத்தின் தம்பிக்கு போன் செய்து அவர் மயங்கி விழுந்து விட்டார் எனவும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தெரிவித்தனர்.
இதில் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பார்த்தபோது அவருக்கு அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஞானசுந்தரம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதனால் கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து தரும்படியும் மருத்துவரிடம் சோபனா கூறியுள்ளார். ஆனால் தற்போது உடனடியாக செய்ய முடியாது என கூறி அச்சுறுத்தியத்தியுள்ளனர்.
மேலும் கேற்றிங்க் சர்வீஸினரின் நடவடிக்கைகளால் அச்சமடைந்த அவர்களை காவல்துறையினர் புகார் அளித்தார். ஆனால், அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஷோபனா கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மனு அளித்தார்.
English Summary
Petition to the Juvenile District Collector