ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே அமைக்கும் புதிய பாலத்தின் பணிகள் விரைவில் முடிக்க திட்டம்..! - Seithipunal
Seithipunal


சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்று தான் பூண்டி ஏரி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால், இதன் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கமான ஒன்று.

அப்படி திறந்துவிடப்படும் தண்ணீர் ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், மெய்யூர், திருக்கண்டலம், அணைக்கட்டு, ஜனப்பன் சத்திரம் வழியாக பாய்ந்து எண்ணூரில் கடலில் கலக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுவது வழக்கமானது. இந்த தரைப்பாலத்தின் வழியாகத்தான் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. 

தரைப்பாலம் மூழ்கிவிட்டால் நீர்வரத்து குறையும் வரை வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. இந்த நேரங்களில்  பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.11.30 கோடி ஒதுக்கியது. 

இந்த நிதியை வைத்து கடந்த 2019-ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கிய நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் பணிகள் மீண்டும் தொடங்கி சற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 180 மீட்டர் நீளத்தில், 9.50 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க உள்ளனர். இந்த பாலத்தை 8 மெகா தூண்கள் தாங்கி நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதத்துக்குள் புதிய பாலப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Plan to complete the work of the new bridge


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->