நாகை || முட்புதருக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு.- தற்கொலையா? கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!! - Seithipunal
Seithipunal


நாகை || முட்புதருக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு.- தற்கொலையா? கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் தையான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மகள் சுஸ்மிதா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சுஸ்மிதா சென்னையிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்த போது, கடந்த ஏப்ரல் 30 ம் தேதி தான் படித்தக் கல்லூரியில் சான்றிதழ் வாங்குவதற்காகச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வரவில்லை. 

இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், பல இடங்களில் சுஸ்மிதாவைத் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து சுஸ்மிதாவின் பெற்றோர்கள்  போலீசில் தன் மகளை காணவில்லை என்று புகார் அளித்தனர். அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதற்கிடையே சிக்கல் கீழவெளி பகுதியில் கருவை காட்டு முட்புதருக்குள் அழுகிய நிலையில் பெண் இறந்து கிடப்பதாக அப்பகுதி பெண்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்துச் சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்த பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அடையாளம் கண்டனர். அதில் இறந்த பெண் தங்களது மகள் சுஸ்மிதா என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் சுஸ்மிதாவும், அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரும் காதலித்து வந்ததாகவும், பார்த்திபனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளதும் தெரிய வந்தது.

மேலும், கடந்த 1-ம் தேதி பார்த்திபன் சுஸ்மிதா இறந்த கிடந்த பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் இடைவெளியில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதனால், போலீசார் சுஸ்மிதாவை கொன்றுவிட்டு பார்த்திபன் தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது சுஸ்மிதா தற்கொலை செய்துக் கொண்டதால் பார்த்திபன் தற்கொலை செய்துக் கொண்டாரா? என்று பல கோணத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation young woman murder case in nagapattinam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->