செங்கல்பட்டு || முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்ட காவலர்.. தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


காவலரை கொலை செய்த உறவினர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

செங்கல்பட்டு மாவட்டம், வடக்கு செய்யூர் பகுதியை சேர்ந்தவர் காமேஷ்குமார். இவர் நீலாங்கரை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். நேற்று காலை அவர் தனது நிலத்தை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவருக்கு அழைப்பு வந்ததால் சாலையோரம் வண்டியை நிறுத்தி பேசி கொண்டிருந்தார்.

அப்போதுஎதிர் திசையில் காரில் வந்த காமேஷ்குமாரின் அக்காள் கணவரான மதன்பிரபு மற்றும் அவரது நண்பர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது காரை ஏற்றினர். இதில், காமேஷ்குமார் சிக்கி கொண்டார். மோட்டார் சைக்கிளும் காரின் அடியில் சிக்கியது. கார் சுவரில் மோதியதில் என்ஜின் தீப்பற்றி எரிந்தது. காரில் வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் காரில் எரிந்த தீயை அணைத்து விட்டு காமேஷ்குமாரைமீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு  செய்த காவல்துறையினர் விசாரணாய் மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் அவரது அக்காள் கணவருக்கும் அவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Man killed in Chengalpattu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->