தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட போலீசார் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!
police officer sucide for suspend in chennai
தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட போலீசார் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!
சென்னையில் உள்ள அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் காவலர் வள்ளிநாயகம். இவர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், எஸ்.ஐ முருகன் மற்றும் ரோந்து வாகன காவலர் வள்ளி நாயகம் உள்ளிட்டோர் கடந்த 5-ம் தேதி இரவு ரோந்து வாகனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அனைவரையும் ஆவடி ஆணையரகம் அலுவலகம் அருகே உள்ள மார்க்டிரில் நிகழ்வுக்கு வருமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அந்த அழைப்பின் படி, எஸ்.ஐ முருகன் தலைமையிலான போலீஸார் ரோந்து வாகனத்தில் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், ரோந்து வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்துக் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வாகன ஓட்டுநர் வள்ளிநாயகத்தை உயர் அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த காவலர் வள்ளிநாயகம் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தையை பார்த்து அவரது குழந்தைகள் அழுதுள்ளனர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது வள்ளிநாயகம் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வள்ளிநாயகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
police officer sucide for suspend in chennai