#ஆருத்ரா_ வழக்கு || மொத்தம் ரூ.600 கோடியாம்... லாபம் பார்த்தவர்களை நெருங்கும் போலீஸ்.!! - Seithipunal
Seithipunal


சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் லாபம் பார்த்த பொதுமக்களளின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஒரு வருடத்தில் 3 லட்சம் ரூபாய் லாபம் எடுத்துவிட்டு பின்னர் முதலீடு செய்யாமல் லாபத்துடன் சென்றவர்கள் குறித்தான விவரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ஆருத்ரா நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்யாமல் சுமார் 600 கோடி ரூபாய் லாப பணம் பொதுமக்களுக்கு சென்றுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். லாபத்தை மட்டும் எடுத்து சென்ற அனைவருக்கும் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ள போலீசார் அவர்களிடமிருந்து லாப பணத்தை வசூல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வரவும் போலீசார் முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police plan to investigate who do not invest again in aruthra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->