இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை இரு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்.11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம், மற்றும் அக்.31ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய இம்மானுவேல் சேகரன், கடந்த 1957 ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பரமகுடியில் ஆண்டு தோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 31 ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள், ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram district 144 prohibition order for 2 months from today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->