RBVS மணியனுக்கு ஜாமீன் கிடையாது! நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஆன்மீக சொற்பொழிவாளரும் விஷ்வ இந்து பரிக்ஷத் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான RBVS மணியன் சென்னையில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அம்பேத்கர், திருவள்ளுவர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் குறித்து இழிவான வகையில் அவதூறாக பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.

அதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில். இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விஷ்வ ஹிந்து பரிக்ஷத் முன்னாள் துணைத்தலைவர் RBVS மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.

அப்போது மணியன் தனக்கு சிறுநீரக தொற்று மற்றும் சர்க்கரை வியாதி உள்ளதால் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என மணியன் கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி அல்லி கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணை ஒத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் RBVS மணியனின் ஜாமின் மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அல்லி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. மணியனின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டார்.

RBVS மணியன் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் அனைத்துமே கடந்த 2021ம் ஆண்டு சேர்ந்தவை என்பதால் மணியனின் பேச்சு சமூகத்தில் இரு பிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் RBVS மணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBVS Manian bail plea rejected by chennai court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->