தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்.. அமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகாலை கன மழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த தொடர் கனமழை காரணமாக ஒருசில பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார். 

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் மாவட்ட கடலோர பகுதிகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்றும், முதல் அமைச்சர் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை குறித்த விபரம்

வீடுகளில் தண்ணீர் புகுந்தால் - ரூ.4800 

பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30,000 

மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் - ரூ.5,000 

கான்கிரீட் கட்டிடம் இடிந்திருந்தால் - ரூ.95,000

மழை, வெள்ளத்தால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு - ரூ.4 லட்சம்

ஆடு, பன்றி உயிரிழந்தால் -ரூ.3,000


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Relief for the families affected by the rains and floods in TamilNadu


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->