சென்னை : நீதிமன்ற வளாகத்தில் வைத்து ரவுடியை கொலை செய்ய முயற்சி!
rowdy madurai bala attack in chennai court
சென்னை : சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில், கொலை வழக்கில் ஆஜராக வந்த ரவுடி மதுரை பாலா-வை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொலை செய்யவந்த கும்பலில், இரண்டு பேர் தப்பி ஓட்டம், மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/chennai saithepet court attempt murder-jpts7.JPG)
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், பிரபல கூலிப்படை ரௌடியாக கருதப்படும் மதுரை பாலா என்பவரை, மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கு தொடர்பாக ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
மதுரை பாலாவை போலீசார் வாகனத்தில் இருந்து இறக்கும்போது, இந்த தாக்குதல் முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து மதுரை பாலாவை, அந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் கொலை செய்ய முயற்சி செய்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/chennai saithepet court-vh5ua.JPG)
உடனடியாக போலீசார் அந்த மர்ம கும்பலை தடுத்து, மதுரை பாலாவை காப்பாற்றினர். மேலும் தப்பி ஓடிய ஐந்து பேரில் மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை பாலா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
rowdy madurai bala attack in chennai court