போன்சாய் செடிதான் முதல்வர் ஸ்டாலின்! வெளியே வந்ததும் சவுக்கு சங்கர் கொடுத்த பேட்டி!
Savukku Shankar Press meet after release DMK MK Stalin Udhay
சிறையிலிருந்து இன்று விடுதலையான சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "திராவிட முன்னேற்ற கழக அரசை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது, திமுக அரசுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதை நிபந்தனையாக கூறினார்கள்.
இந்த நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், நாங்கள் உடனடியாக உங்களை விடுவிப்போம். அதை மீறினால் நாங்கள் ஒரு வருடத்திற்கு உங்களை சிறையில் இருந்து வெளியே வர விடமாட்டோம் என்று கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள்.
நான் உண்மைகளை பேசுவதற்கு என்றுமே அஞ்சப் போவதில்லை என்று நான் அத்தனை பேரிடமும் பதில் கூறியதன். இதன் காரணமாகத்தான் அதிகாலை 3 மணிக்கு சென்னை புழல் சிறையில் இருந்து அவசர அவசரமாக அழைத்து வந்து மதுரை சிறையில் அடைத்து என்னை இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்தார்கள்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல, விமர்சனங்களை பார்த்து பழகியவர் அல்ல, விமர்சனங்களை பார்த்து வளர்ந்தவர் அல்ல, தந்தையின் நிழலில் வளர்ந்த போன்சாய் செடிதான் ஸ்டாலின் அவர்கள்.
பணியில் இருக்கும் அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை தருவது போலத்தான், திமுகவின் தலைவர் ஆகி இருக்கிறார் முக ஸ்டாலின் அவர்கள். அதுபோலத்தான் தமிழகத்தின் முதல்வராகவும் ஆகிய இருக்கிறார்.
திமுக ஆட்சியின் உண்மைகளை எட்டு மாத காலமாக தொடர்ந்து எடுத்துக் கூறியதன் காரணமாக தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சவுக்கு மீடியா அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
English Summary
Savukku Shankar Press meet after release DMK MK Stalin Udhay