13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் - போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் - போக்சோவில் கைது.!

மதுரை மாவட்டத்தில் உள்ள பசுமலைப் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரும் பக்கத்து வீட்டில் இருக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய சிறுவன் அந்த சிறுமியை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது அவரிடம் பாலியல் ரீதியான அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார். இதை சிறுமி கண்டித்தும் மாணவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். 

நாளுக்கு நாள் மாணவனின் தொல்லை அதிகரித்ததால், சிறுமி சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். 

அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 12-ம் வகுப்பு மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student arrested for sexuall harassment case in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->