தனுஷ்கோடியில் கடல் சீற்றம்.. பொதுமக்கள் கடலில் இறங்க தடை.! - Seithipunal
Seithipunal


தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்களுக்கு கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

 இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும், தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தை பார்வையிடச் செல்ல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரிச்சல்முனை பகுதியிலும் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தடுப்புகளுக்கு அருகே நின்று பார்த்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sea rage in Dhanushkodi Public ban on going to sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->