உள்ளேன் அய்யா! திடீர் என்ட்ரி கொடுத்த செந்தில் பாலாஜி!
Senthil Balaji Reply to ADMK GS EPS
தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்யும் தமிழக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி இன்று விடுத்துள்ள கண்டன அறிக்கையில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையை துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொம்மை முதலமைச்சர் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.
கொலைக்களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களைப் பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் இந்த அடாவடி அரசை, அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, "கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shop-களில் (வணிக வழக்கங்களில்) தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவாக விளக்கமளித்துவிட்டது.
அதன் பிறகும், 'உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திரு.பழனிசாமி" என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
English Summary
Senthil Balaji Reply to ADMK GS EPS