தசரா திருவிழா - குலசேகரப்பட்டினத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்காரம் வரும் அக்டோபர் 12ம் தேதி நள்ளிரவு நடைபெறும்.

இந்த தசரா திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த நிலையில், குலசேகரபட்டினத்தில் தசரா பண்டிகைக்கு மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக இன்று முதல் அக்டோபர் 12ம் தேதி வரை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயகப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப் பட்டிணம், கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப் பட்டினத்திற்கும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தசரா பண்டிகை முடிந்து மக்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக அக்டோபர் 13 முதல் 16 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பயணிகள் www.tnstc.in, tnstc official செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

special bus run in thoothukudi kulasekarapatinam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->