தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை.! - Seithipunal
Seithipunal


இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் விவரம் பின்வருமாறு:-

"சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதனால், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இதேபோல், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் உள்ளிட்டவற்றில், அதிகாலையிலேயே திரளாள பக்தர்கள் குவிந்துள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளன.

மேலும், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில், திருத்தணி முருகன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பர நாதர் கோவில், கைலாசநாதர் கோவில் மற்றும் ராமநாதபுரம் ராமநாத சாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special pooja in tamilnadu temples for new year


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->