இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி...தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!
Sri Lankan Navy Strikes Again... 14 Tamil Nadu fishermen arrested
இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டிய நிலையில் உள்ளனர் .மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய ,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/rameswaram fishermens a.jpg)
இந்த நிலையில், இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் நீடித்து வருவது தமிழக மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sri Lankan Navy Strikes Again... 14 Tamil Nadu fishermen arrested