அரசு பேருந்து மீது கல்வீச்சு - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதன் படி இந்த பேருந்து மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக, தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் பேருந்து மீது கற்களை வீசியது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரனை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stone attack to govt bus in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->