லஞ்சம் வாங்குவது இழிவான செயல்.. புகார் வந்தால் 10 நாட்களில் நடவடிக்கை.. மின்வாரியம் எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சேவை இணைப்புகளை வழங்குவதற்கு மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் லஞ்சம் கேட்பதும், வாங்குவதும் வழக்கமாக கொண்டுள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார்கள் குவிந்துள்ளன.

இந்த புகார்களை அடுத்து இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்தாள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Strict action if tneb employees accept bribe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->