பேரறிவாளன் விடுதலை.. காங்கிரஸ் கட்சியினர் இன்று அறப்போராட்டம்.! - Seithipunal
Seithipunal


பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று அறப்போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் ஏன் எழவில்லை. அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா.? ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா.? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை போராட்டம் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu Congress protest against perarivalan release


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->