தமிழக அரசு காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஆய்வு!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேசில் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

தமிழகத்தின் கடை கொடியில் அமைந்துள்ள கடலோர மீனவ கிராம மக்களின் பொருளாதார நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து அரசாணை வெளியிடப்பட்ட கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்துப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை கொண்டு சேர்ப்பதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் நிநிநிலையைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்தார். இதனையேற்று கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Govt study to expand breakfast scheme


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->