தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


 தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு இன்று (மார்ச் 4ம் தேதி) வைகுண்டர் 190 வது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (மார்ச் 4ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu today 4 districts holiday for samithoppu Vaikuntha festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->