தமிழகத்தில் 11 ஆயிரம் புதிய டிரான்ஸ்பாமர்கள், தனிப்பட்ட அடையாளத்துடன் வாங்கிய TANGEDCO !!
TANGEDCO bought eleven thousand new transformers in Tamil Nadu with unique identification
மின்சார விநியோகத் துறையில் மேற்கொள்ள படும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, டாங்கெட்கோ 11,000 டிரான்ஸ்பாமர்களை வாங்கியுள்ளது. இந்த மின்மாற்றிகளின் செயல்திறனைத் துல்லியமாகக் கண்காணித்து மதிப்பிட மேலும் உதவியாக இருக்கும்.
இந்த மின்மாற்றிகளின் அடையாள எண்கள் மூலம், வாங்கிய மற்றும் நிறுவப்பட்ட தேதி, இடம், மாதிரி, உத்தரவாத விவரங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய டிரான்ஸ்பார்மரின் வரலாற்றைக் கண்காணிப்பது எளிதாங்கியுள்ளது. இதை தற்போது, சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் இந்த மின்மாற்றிகளை அமைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மின்சார விநியோக மின்மாற்றிகளுக்கான டாங்கெட்கோவின் தற்போதைய அடையாள செயல்முறைகள் கைமுறையாகவே உள்ளன. பயனுள்ள கண்காணிப்பு மற்றும் பயன்பாட்டை உறுதி செய்யும் தனித்துவமான எண்களுடன் அவற்றை ஒருங்கிணைக்க திட்டமிடபட்டுள்ளது.
தற்போது, அதிகாரிகள் குழு விற்பனையாளர்களை பார்வையிட்டு, மின்மாற்றிகளுக்கு எண்களை வழங்கி வருகிறது. டெலிவரிக்கு முன், விற்பனையாளர் டிரான்ஸ்பார்மர்களில் தனித்துவமான எண்ணை வைப்பார். டேங்கட்கோவின் ஒருங்கிணைந்த கணினி சேவையகங்களில் பதிவுகள் பராமரிக்கப்படும்.
தற்போது இரண்டாம் கட்டமாக தமிழகத்தில், 9,140 புதிய டிரான்ஸ்பார்மர்களுக்கும் அதற்கே உரிய தனித்துவமான எண்களை பொருட்களை டாங்கெட்கோ வாங்க ஒரு மின்மாற்றி உற்பத்தி நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர்கள் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட அந்த மின்மாற்றி உற்பத்தி நிறுவனங்களால் தேவையான அளவு உற்பத்தி செய்து தமிழ்நாட்டில் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
TANGEDCO bought eleven thousand new transformers in Tamil Nadu with unique identification