மது அருந்த ஒன்றாக சென்ற வாலிபர்கள்! மதுபோதையில் நண்பர் தலையில் கல்லை போட்டு கொலை! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் திருக்குறிப்பு தொண்டர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (33), இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரியின் கணவர் முரளி (34). இவர் சலவை தொழில் பார்த்து வருகிறார். பின்னர், கீழ்பெரும்பாக்கம் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (45) இவரும் சலவை தொழில் பார்த்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று மாலை நண்பர்களான இவர்கள் மூன்று பேரும்  சித்தேரிக்கரை டாஸ்மாக் அருகில் மது அருந்தி கொண்டிருந்தனர். அதன்பின் குடிபோதை தலைக்கேறிய பிறகு மூவரும் தங்களது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில், குடிபோதையில் இருந்த ரஞ்சித்குமார் மற்றும் அருண்குமாருக்குவாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த முரளி என் மாமாவையே திட்டுகிறாயா என்று கூறி ரஞ்சித்தை அடித்ததில் அவர் கீழே விழுந்துள்ளார். 

பின்னர் கோபம் அடைந்த அருண்குமாரும், முரளியும் சேர்ந்து பெரிய கல்லை ஒன்று எடுத்து ரஞ்சித்குமார் தலையில் போட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இதனைதொடர்ந்து இரவு வீட்டிற்கு வந்த அருண்குமார் மற்றும் முரளி வீட்டில் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடி தங்களது ஆடைகளை மாற்றிக் கொண்டு வீட்டிற்கு அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு சென்றுள்ளனர்.

இநிலையில், ரஞ்சித்குமாரின் அம்மாவிற்கு சந்தேகம் எழுந்த நிலையில் , போலீசாருக்கு இது குறித்து தகவல் . அளித்தார். இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் வீட்டிற்கு விரைந்து வந்து அருண்குமார் மற்றும் முரளி இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரஞ்சித்குமார் தலையில் நாங்கள் மதுபோதையில் கல்லை போட்டதில் இறந்துவிட்டார் என இருவரும் கொலை செய்ததை  போலிசாரிடம் ஒப்புக் கொண்டனர். 

இதனை தொடர்ந்து போலீசார் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று பரிதாபமாக இறந்து கிடந்த ரஞ்சித்குமார் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அம்புலன்சில் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை செய்த இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teenagers went to drink together Drunken friend killed by throwing a stone on his head


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->