சென்னை ECR-ல் பயங்கர விபத்து!.....கூண்டோடு 4 நண்பர்கள் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் இருந்து ஈசிஆர் சாலை வழியாக சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, கோவளம் அருகே பேரிகேட் மீது மோதியது. தொடர்ந்து  ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில்  விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதும், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முகமது ஆசிக் கடந்த 3ம் தேதி சொந்த ஊரான சென்னை வந்துள்ளது தெரிய வந்தது.

மேலும் அவர் தனது நண்பர்கள் அடில் முகமது, அஸ்லப் முகமது, சுல்தான் ஆகிய 3 பேருடன் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காரில்  சென்றதும், புதுச்சேரியில் இருந்து இன்று காலை 4 பேரும் காரில் சென்னை திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible accident in Chennai ECR Tragedy 4 friends died in a cage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->