காணாமல் போன 6 சவரன்... 1 டன் குப்பையில் தேடி கண்டுபிடித்து கொடுத்த துப்புரவு பணியாளர்கள்!
The cleaning workers who searched and found the missing 6 sawan in 1 ton of garbage!
கோயம்புத்தூரை அடுத்த கோவைப்புதூரில் குப்பையில் தவறவிட்ட ஆறு சவரன் தங்க நகையை பெண் துப்புரவு தொழிலாளர்கள் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவைப்புதூரில் வசித்து வந்த சிவகாமி என்பவர் தனது ஆறு பவுன் தங்க சங்கிலியை பிளாஸ்டிக் கவரில் பத்திரமாக போட்டு வைத்திருந்தார். தவறுதலாக அதை குப்பையுடன் சேர்த்து கொட்டி விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் தங்க சங்கிலி காணாமல் போனதை அறிந்து வீட்டில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால் , வார்டு கவுன்சிலர் உதயகுமாரிடம் புகார் அளித்தார் . இதையடுத்து துரிதமாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்திரி ஆகியோர் அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட ஒரு டன் குப்பையை கீழே கொட்டி தங்க நகையை கண்டுபிடித்து சிவகாமியிடம் ஒப்படைத்தனர்.
தொலைந்த நகை மீண்டும் கைக்கு வந்ததும் சிவகாமி ஆனந்த கண்ணீர் வடித்தார். அப்போது துப்புரவு தொழிலாளர்கள், சிவகாமியிடம் அம்மா அழாதீர்கள், இப்பொது உங்களுக்கு சந்தோஷமா என்று கேட்டதோடு, மாநகராட்சி ஊழியர்களை யாரும் தவறாக எடை போடாதீர்கள் என்றும் கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The cleaning workers who searched and found the missing 6 sawan in 1 ton of garbage!